Friday, March 23, 2007

நான் கொஞ்சம் 'ஒரு மாதிரி'

'சமீபத்த்தில்' புகழ் டோண்டு ராகவன், எனக்கு அவரது இந்தப் பதிவு வாயிலாக விடுத்த அழைப்பை ஏற்று, நான் கருதும் எனது 'ஒரு மாதிரி' டைப் குணாதிசயங்களை பட்டியலிடுகிறேன் ! இவை ஒரு மாதிரி தானா அல்லது சாதாரணமாக பலரிடமும் காணப்படும் இயல்புகள் தானா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ! Over to 'ஒரு மாதிரி' குணங்கள் :)

1. பிறருக்கு ஒன்றை பல முறை தெளிவுபடுத்தும் இயல்புடையவன் நான். காரணம், பல சமயங்களில் நான் சொல்லும் விதத்தில் அல்லது அவர்களின் புரிந்து கொள்ளும் திறனில் குறையோ என்ற எனது விடாத சந்தேகம் :)

2. "எதையும் ஒரு முறை" (சுஜாதாவின் நாவல் ஒன்று இத்தலைப்பில் உண்டு!) செய்து பார்க்கும் ஆர்வம், சிறு வயதில் அதிகம். ஒரு சமயம், மின்சாரப் பிளக்கை முழுதுமாகப் பொருத்தாமல், 'ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு.

3. என்னுடன் பழகியவர் மனம் கோணாமல் நடக்க அதீத (தேவைக்கதிகமாக) முயற்சிகள் எடுப்பது ! பள்ளிக் காலத்தில், ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுக்க பெருமுயற்சி மேற்கொண்டது நினைவுக்கு வருகிறது :) அதனால், சுற்றியிருப்பவர் என்ன நினைப்பார் என்ற எச்சரிக்கை உணர்வு சற்று தூக்கலாக இருக்கும்! அது இப்போது குறைந்து வருகிறது. நமக்காக (பெருமளவு) வாழ்வோம் என்ற மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

4. ஏதோ ஒரு வேண்டாத காரணத்தால் ஏற்பட்ட சண்டை/விவாதத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டே, (ஒரு வியாதி போல!) அதைத் தொடர்வது :) அதனால் சிக்கல் அதிகரித்து, தேவையில்லாமல் மூட் அவுட் ஆவது !!!

5. மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவது, அதாவது, at times, I am brutally frank. This has both good and bad effects! 3வது குணமும், 5வது குணமும் எதிர்மறையாக முட்டிக் கொள்வதை கவனிக்கவும் :)

6. Trace of pessimism: மேற்கொண்ட/செய்யும் ஒரு காரியம்/செயல் தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகம் ஆராய்தல், கவலை கொள்ளல். தற்போது, என்னை மாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.

7. மேற்கூறியது போலவே, ஒரு காரியத்தை செய்ய தலைப்படும்போது, அதை எப்படி நல்லவிதமாக முடிக்கலாம் என்று ஓயாமல் யோசித்துக் கொண்டிருப்பது! Again, this quality has both good and bad effects!

8. புறத்தோற்றத்தில் அதீத அக்கறையின்மை! (மனைவி பலமுறை சொல்லிப் பார்த்து விட்டு விட்டார் :) இது எனது பாட்டனாரிடமிருந்து கிடைத்த 2வது சொத்து, முதல் சொத்து, ஓரளவு ஆங்கிலப்புலமை! நமது பேச்சு நடவடிக்கைகளின் மூலம் பிறர் நம்மை மதிக்க/ஏற்க வேண்டுமேயன்றி, நம் லுக்கை வைத்து அல்ல என்ற திடமான அபிப்பிராயம் இதற்குக் காரணமாக இருக்கலாம் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 315 ***

7 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

Boston Bala said...

very frank indeed!

ஆதி said...

சுவையான பதிவு. நன்றாக இருக்கிறது பாலா.

பொன்ஸ்~~Poorna said...

//பிறருக்கு ஒன்றை பல முறை தெளிவுபடுத்தும் இயல்பு//

//என்னுடன் பழகியவர் மனம் கோணாமல் நடக்க அதீத (தேவைக்கதிகமாக) முயற்சிகள் எடுப்பது!//

//மேற்கூறியது போலவே, ஒரு காரியத்தை செய்ய தலைப்படும்போது, அதை எப்படி நல்லவிதமாக முடிக்கலாம் என்று ஓயாமல் யோசித்துக் கொண்டிருப்பது//
இதெல்லாம் 'ஒரு மாதிரி'ன்னு நீங்களே ஒத்துக்கிறீங்களா? :))))

நல்ல பழக்கங்கள் தான்..ஆனாலும் :)

enRenRum-anbudan.BALA said...

பாஸ்டன் சார்,
வாங்க, அப்பப்ப இப்படி தலையைக் காட்டினால், மகிழ்ச்சி தான், இப்பதிவுக்கு snapjudge-இல் லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.

ஆதிசேஷன்,
முதல் வருகைக்கு நன்றி.

பொன்ஸ்,
'ஒரு மாதிரி'ன்னு நெனைச்சு தானே, இவற்றைப் பட்டியலிட்டேன் :)

//நல்ல பழக்கங்கள் தான்.. ஆனாலும்
//
என்ன உள்குத்து அம்மணி :))) அப்புறம், நான் கேட்ட ஸ்கிரிப்டுகளை ரெடி பண்ணி மெயிலில் அனுப்பவும்.

எ.அ.பாலா

ச.சங்கர் said...

Balaji wrote
"நான் கொஞ்சம் 'ஒரு மாதிரி' "

I know this for the past 20 years.. you accept this only now :)

enRenRum-anbudan.BALA said...

Thanks Sankara for confirmation :)))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails